×

அறந்தாங்கியில் மழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு ஒத்திகை செயல்விளக்கம்

 

அறந்தாங்கி, அக். 10: அறந்தாங்கியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு காலங்களில் மீட்பு பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் மாநில அரசின் உத்தரவின்பேரில் பருவமழையை முன்னிட்டு நீர் நிலைகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு செயல்விளக்க ஒத்திகை பயிற்சி நடைபெற்று வருகிறதுது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு செயல்முறை ஒத்திகை நிகழ்ச்சி அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி குளம் மற்றும் நீர் நிலைகளில் மூழ்கியவர்களை எவ்வாறு மீட்பது குறித்த செயல்முறை விளக்கங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இயற்கை இடர்பாடுகள் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித் தவித்தால் பொதுமக்களை எவ்வாறு மீட்பது குறித்த போலி ஒத்திகை விழிப்புணர்வு செய்து காண்பித்தனர்.நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஆர்டிஒ சிவக்குமார், வட்டாட்சியர் திருநாவுக்கரசு, தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன், கல்லணை கால்வாய் பாசன ஒருங்கிணைப்பு குழு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அறந்தாங்கியில் மழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு ஒத்திகை செயல்விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Disaster recovery drill ,Aranthangi ,Arandangi ,Northeast ,Tamil Nadu ,
× RELATED அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக்...