×

தியாகி இமானுவேல் சேகரன் படத்திற்கு அமைச்சர் மரியாதை

 

திருச்சி. அக்.10: 1924ம் ஆண்டு அக்.9ம் தேதி பிறந்த தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்த நாளை தமிழக முதலமைச்சர் அரசு விழாவாக அறிவித்தார். அவர் அறிவித்தது போல அவருடைய 100வது பிறந்தநாளை அரசு விழாவாக இந்த ஆண்டு முதல் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் தியாகி இமானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி துணை செயலாளர் ஆனந்த், சேர்மன் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் இமானுவேல் சேகரனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post தியாகி இமானுவேல் சேகரன் படத்திற்கு அமைச்சர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Martyr Emanuel Sekaran ,Chief Minister of Tamil Nadu ,Martyr Immanuel Sekaran ,Martyr Emmanuel Sekaran ,
× RELATED பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை...