×

தொடர் விடுமுறையையொட்டி சென்னை சென்ட்ரல்-கோட்டையத்திற்கு சிறப்பு ரயில்

 

திருப்பூர், அக்.10: தொடர் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை சென்ட்ரல் – கோட்டையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல் – கோட்டையம் சிறப்பு ரயில் 10, 12 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.55க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.45க்கு கோட்டையம் சென்று சேரும். அதேபோல், கோட்டையம் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் 11, 13 ஆகிய தேதிகளில் கோட்டையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.சென்னை சென்ட்ரல் – கோட்டையம் சிறப்பு ரயில் திருப்பூருக்கு காலை 07.08 மணிக்கும், கோட்டையம் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் திருப்பூருக்கு இரவு 23.55 க்கும் வந்து சேரும். இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தொடர் விடுமுறையையொட்டி சென்னை சென்ட்ரல்-கோட்டையத்திற்கு சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Tags : Chennai Central-Kottayam ,Tirupur ,Chennai Central – ,Kottayam ,Chennai Central ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!