×

தமிழ்நாட்டில் முதன்முறையாக சட்டக்கல்லூரி முதல்வராக மாற்றுத்திறனாளி பொறுப்பேற்பு

மதுரை: மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக முனைவர் பி.குமரன் பணியாற்றி வந்தார். இவரை, மதுரை அரசு சட்டக்கல்லூரியின் முழு நேர முதல்வராக நியமித்து சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுக் ெகாண்டார். அவருக்கு பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளியான முனைவர் குமரன், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சட்டக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்படும் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டில் முதன்முறையாக சட்டக்கல்லூரி முதல்வராக மாற்றுத்திறனாளி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai ,Dr. ,P. Kumaran ,Madurai Government Law College ,George Alexander ,Dinakaran ,
× RELATED பாலியல் குற்றங்களில் இருந்து...