×

இன்டோஸ்பேஸ் நிறுவனம் தமிழகத்தில் லாஜிஸ்டிக்ஸ் பார்க் தொழிலை விரிவுபடுத்துவதற்காக ரூ.4500 கோடி முதலீடு: 8000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு

சென்னை: இன்டோஸ்பேஸ் நிறுவனம் தமிழகத்தில் உள்ள லாஜிஸ்டிக்ஸ் பார்க் தொழிலை விரிவுபடுத்த ரூ.4500 கோடி முதலீடு திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு 8000க்கும் மேற்ப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்டோஸ்பேஸ் என்ற நிறுவனம் தமிழகத்தில் உள்ள தனது லாஜிஸ்டிக்ஸ் பார்க் தொழிலை விரிவுபடுத்துவதற்காக ரூ.4500 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசுடன் கடந்த ஆண்டு ரூ.2000 கோடி மதிப்பீல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இது 8000க்கும் மேற்ப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பெரிய அளவில் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் சொந்தமாக லாஜிஸ்டிக் விஷயங்களை பார்த்து வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் சிறிய அளவில் தொழில் செய்யும் நிறுவனங்களும் லாஜிஸ்டிக் தனியார் நிறுவனங்களை நாடி வருகின்றனர்.

தமிழகத்தில் செயல்படும் நிறுவனம் தான் இண்டோஸ்பேஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லாஜிஸ்டிக் சேவைகளுக்காக கட்டுமானங்களை உருவாக்கி அதன் மூலம் தனியார் உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு லாஜிஸ்டிக் சேவைகளை வழங்கி வருகிறது. ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான அசல் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த தொழிலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள தனது லாஜிஸ்டிக்ஸ் தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. சென்னையில் ஏற்கனவே நிறுவனம் லாஜிஸ்டிக் பார்க் நடத்தி வரும் நிலையில், இன்னும் கூடுதலாக தனது இடத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.4500 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே 88 லட்சம் சதுர அடி அளவில் தமிழகத்தில் கட்டுமானங்களை வைத்துள்ள நிலையில் மேலும் கூடுதலாக 20 லட்சம் சதுர அடி இடத்தை பயன்படுத்தி கட்டுமானங்களை செய்து வருகிறது. கூடுதலாக 46 லட்சம் சதுர அடி இடத்திற்கு எதிர்காலத்தில் கட்டுமானம் செய்ய திட்ட மிட்டுள்ளது. மொத்தம் 649 ஏக்கரில் தனது தொழிலை விரிவு படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது.

இந்த லாஜிஸ்டிக் நிறுவனங்கள் பெரிய அளவில் நடந்தால் மட்டுமே லாபம். அதனால் சிறிய நிறுவனங்கள் இப்படியான லாஜிஸ்டிக் சேவையை தங்களே வைத்திருக்க மாட்டார்கள். வெளியில் உள்ள லாஜிஸ்டிக் நிறுவனங்களிடம் தான் பெறுவார்கள். அப்படியாக லாஜிஸ்டிக் வழங்கும் நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இன்டோஸ்பேஸ் நிறுவனம் தமிழகத்தில் லாஜிஸ்டிக்ஸ் பார்க் தொழிலை விரிவுபடுத்துவதற்காக ரூ.4500 கோடி முதலீடு: 8000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Indospace ,Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...