×

கோவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

 

திருப்பூர், அக்.9: திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அதற்கேற்ப பனியன் தொழிலும் அதிகப்படியாக நடைபெற்று வருகிறது. வெளி மாநிலத்திலிருந்து திருப்பூருக்கு வரும் பெரும்பாலான தொழிலாளர்கள் ரயில் மூலம் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு ஞாயிற்றுகிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனை தொடர்ந்து அந்த பள்ளியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு அது வதந்தி என உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்டல் டிடெக்டர் உதவியோடு நேற்று சோதனை மேற்கொண்டனர். ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகள், ரயிலில் செல்லும் பயணிகள் ஆகியவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

The post கோவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tiruppur train station ,Gowai school ,Tiruppur ,Tiruppur Banion ,Goa ,Tiruppur Railway Station ,Dinakaran ,
× RELATED தனியார் டவுன் பஸ்கள் மோதி விபத்து;...