×

கணவனும் சிகிச்சை பலனின்றி பலி கார் விபத்தில் மனைவியை தொடர்ந்து

வந்தவாசி, அக்.9: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, பெருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி சாந்தா(60), மகன் சத்தியமூர்த்தி(40). சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடப் பணி செய்து வருகிறார். ஜானகிராமனுக்கு மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக தனது தந்தையை பெருவளூர் கிராமத்திலிருந்து காரில் நேற்று முன்தினம் காலை சத்தியமூர்த்தி அழைத்துச்சென்றார். உடன் சாந்தாவும் சென்றார். வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலை மாம்பட்டு கிராமம் அருகே சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சாந்தா பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த ஜானகிராமன், சத்தியமூர்த்தி இருவரும் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜானகிராமன் பரிதாபமாக பலியானார். விபத்தில் மனைவி பலியானதை தொடர்ந்து கணவனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கணவனும் சிகிச்சை பலனின்றி பலி கார் விபத்தில் மனைவியை தொடர்ந்து appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Janakiraman ,Peruvalur ,Melmalayanur taluk ,Villupuram district ,Shantha ,Sathyamurthy ,Chennai ,Peruvalur village ,
× RELATED செவிலிமேடு அருகே ரூ.100 கோடியில் நடந்து...