×

மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காவலர்

ஆத்தூர், அக்.9: ஆத்தூர் அருகே டூவீலரால் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா(60). இவர், கடந்த 6ம் தேதி இரவு 8 மணியளவில் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த டூவீலர் மோதியதில் மல்லிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்தியவர் நிற்காமல் சென்று விட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மல்லியகரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மல்லியகரை போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய டூவீலர் குறித்து விசாரித்தனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை கொண்டு, மூதாட்டி மீது மோதிய டூவீலரின் எண்ணை வைத்து விசாரித்ததில், தம்மம்பட்டியை சேர்ந்த சங்கரநாராயணன்(30) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இவர் உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல் படைபிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6ம் தேதி தனது தாயாரின் நினைவு நாளுக்காக தம்மம்பட்டிக்கு வந்தபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மல்லியகரை போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற ஆயுதப்படை காவலர் சங்கரநாராயணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காவலர் appeared first on Dinakaran.

Tags : Athur ,Mallika ,Echampatti ,Attur ,Salem district ,
× RELATED ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம்