×

பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமனம்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழநாட்டில் சட்ட பேரவை தேர்தல் பணிகளை மேற்பார்வையிட 234 தொகுதிக்கும் தொகுதி பார்வையாளர்களை திமுக நியமித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தொகுதி பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமைக் கழகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ், பெரம்பூர்- அயலக அணி துணை செயலாளர் கோ.ஸ்டாலின், ராயபுரம்- சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான், மாதவரம்-மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் ஜெ.அருண், திருவொற்றியூர்- திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கே.ஆறுமுகம், அம்பத்தூர்-சென்னை வடகிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பி.முனியாண்டி, கொளத்தூர்-சட்டத்துறை தலைவர் ஆர்.விடுதலை, வில்லிவாக்கம்- நெசவாளர் அணி துணை தலைவர் பள்ளிப்பட்டு ஓ.ஏ.நாகலிங்கம்.

திரு.வி.க.நகர் (தனி) -திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, எழும்பூர் (தனி)- மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்- ப.மீ.யாழினி, துறைமுகம்- பொறியாளர் அணி துணை செயலாளர்- இரா.நரேந்திரன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் வே.கவுதமன், அண்ணாநகர்- தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, தியாகராயநகர்- தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் எஸ்.பத்மபிரியா, மயிலாப்பூர்- தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின், மதுரவாயல்- வர்த்தகர் அணி இணைச்செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம், விருகம்பாக்கம்- பொறியாளர் அணி துணை செயலாளர் வே.உமாகாந்த், சைதாப்பேட்டை- அயலக அணி துணை செயலாளர் ப.பரிதி இளம்சுருதி, வேளச்சேரி- சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சாய் ஜெயகாந்த் பாரதி, சோழிங்கநல்லூர்- இலக்கிய அணி பொருளாளர் டாக்டர் நா.சந்திரபாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல 234 தொகுதிகளுக்கான தொகுதி பார்வையாளர்கள் பெயர்களை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

The post பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமனம்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை...