- சென்னை
- எச்.இ.
- பொது செயலாளர்
- எடப்பாடி கே. பழனிசாமி
- அண்ணா பல்கலைக்கழக வளாகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எடப்பாடி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆகியுள்ளதை கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்துகொண்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக போராட்டம் தொடரும்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.