×

ஆயுத கடத்தல் வழக்கில் உல்பா தலைவரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள சிட்டாகாங்க் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு 10 லாரிகள் நிறைய ஆயுதங்கள்,ராக்கெட் லாஞ்சர்கள்,கையெறி குண்டுகள் உள்ளிட்டவை போலீஸ் சோதனையில் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்களை அசாமில் உள்ள உல்பா தீவிரவாத அமைப்புக்கு சப்ளை செய்வதற்காக ஆயுதங்கள் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் உல்பா அமைப்பின் தலைவர் பரேஷ் பருவா,2 முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ராணுவ தளபதிகள் உட்பட 14 பேருக்கு சிட்டகாங்கில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், பருவாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது.

The post ஆயுத கடத்தல் வழக்கில் உல்பா தலைவரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : ULFA ,Dhaka ,Chittagong, Bangladesh ,Assam… ,Dinakaran ,
× RELATED 2025ம் ஆண்டு இறுதிக்குள் வங்கதேசத்தில் தேர்தல்: அரசு தலைமை ஆலோசகர் கருத்து