×

சேலத்தில் லஞ்சம் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது..!!

சேலம்: சோதனை நடத்தாமல் இருக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் தந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். சேலம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக சதாசிவம் உள்ளார். சோதனை செய்ய வரும் முன்பு தகவல் கூறுமாறு, லஞ்ஒழிப்புத்துறை ஆய்வாளரை சதாசிவம் தொடர்புகொண்டார். சோதனை நடத்தாமல் இருக்க மாதம் ரூ.50,000 தருவதாகவும், முதற்கட்டமாக ரூ.1 லட்சம் தருவதாக கூறியுள்ளார். லஞ்சஒழிப்புத்துறை ஆய்வாளர் ரவிக்குமார் அளித்த புகாரின்பேரில் சதாசிவத்தை பொறிவைத்து பிடிக்க திட்டம் தயாரானது. மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவத்தை, கருப்பூர் அருகிலுள்ள ஓட்டலுக்கு ஆய்வாளர் ரவிக்குமார் வரவழைத்தார். லஞ்சமாக ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற சதாசிவத்தை லஞ்சஒழிப்புத்துறை கையும் களவுமாக கைது செய்தது.

The post சேலத்தில் லஞ்சம் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Sathasivam ,West Regional Transport Office ,Salem Kandampatti ,Bribe ,Dinakaran ,
× RELATED பெண்ணை தாக்கிய வாலிபர் கைது