- கரூர்
- தாந்தோனிமலை
- Rayanur
- அரசு காலனி
- வெங்கப்பளையம்
- வெங்கமெடு
- காண்டிகிராம்
- பசுபதிபாளையம்
- வாதிவேல் நகர்
- இனாம் கருர்
- குளத்துப்பாளையம்
கரூர், அக். 8: கரூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் ‘தெர்மோ ஸ்டேடிக்’ வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனூர், அரசு காலனி, வாங்கப்பாளையம், வெங்கமேடு, காந்திகிராமம், பசுபதிபாளையம், வடிவேல் நகர், இனாம்கரூர், குளத்துப்பாளையம் போன்ற பகுதிகளில் வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் கடந்த நிலையில் வெள்ளை வர்ணம் அழிந்து, வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகள் அரியாத நிலையில் உள்ளது.
இதனால், புதிதாக இந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, அனைவரின் நலன் கருதி இந்த பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் மீது வர்ணம் பூச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, வேகத்தடைகளின் மீது தெர்மோஸ்டேடிக் வர்ணம் பூச தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
The post கரூரில் வேகத்தடைகளில் ‘தெர்மோ ஸ்டேடிக்’ வர்ணம் பூச வேண்டும் appeared first on Dinakaran.