×

அசாம்: வங்கதேச ஊடுருவல்காரர்கள் 4 பேர் கைது

கவுகாத்தி: அசாமில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அந்த நாட்டு பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடுகையில்,வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்ட பிறகு, நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 112 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அந்த நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

The post அசாம்: வங்கதேச ஊடுருவல்காரர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Assam ,Guwahati ,Chief Minister ,Himanta Biswa Sharma ,Bangladesh ,Dinakaran ,
× RELATED அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர்...