- இந்தியா U-19
- சென்னை
- 2வது யூத் டெஸ்ட்
- ஆஸ்திரேலியா U-19 அணி
- இந்திய U-19 அணி
- செபக்கம்
- ம.
- சிதம்பரம் அரங்கம்
- தின மலர்
சென்னை: ஆஸ்திரேலியா யு-19 அணியுடனான 2வது இளைஞர் டெஸ்ட் போட்டியில், இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 316 ரன் குவித்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா யு-19 அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. விஹான் மல்கோத்ரா, வைபவ் சூர்யவன்ஷி இணைந்து இன்னிங்சை தொடங்கினர். சூர்யவன்ஷி 3 ரன்னில் வெளியேற, படு நிதானமாக விளையாடிய விஹான் 75 பந்தில் 1 பவுண்டரி உள்பட 10 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். தொடக்க வீரர்கள் ஏமாற்றமளித்த நிலையில்… சக முன் வரிசை வீரர்கள் நித்ய பாண்டியா 94 ரன் (135 பந்து, 12 பவுண்டரி), கே.பி.கார்த்திகேயா 71 ரன் (99 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), நிகில் குமார் 61 ரன் (93 பந்து, 7 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 316 ரன் குவித்துள்ளது. கேப்டன் சோஹம் பட்வர்தன் 61 ரன் (120 பந்து, 6 பவுண்டரி), ஹர்வன்ஷ் பங்காளியா 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. யு-19 தரப்பில் ஹாரி ஹோக்ஸ்ட்ரா 2, பேட்டர்சன், கிறிஸ்டியன் ஹோவ், விஸ்வா ராம்குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள்
ஆட்டம் நடக்கிறது.
The post இந்தியா யு-19 அபார ரன் குவிப்பு appeared first on Dinakaran.