×

கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை

 

உடுமலை, அக். 7: கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் (எச்எம்எஸ்) சங்கம் திறப்பு விழா உடுமலையில் நேற்று நடந்தது.  சங்க பொதுச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் காளிமுத்து வரவேற்றார். எச்எம்எஸ் மாநில செயலாளர் ராஜாமணி அலுவலகத்தை திறந்து வைத்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் கொடியேற்றினார்.

நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்ரமணியம், சங்க செயல் தலைவர் பழனிசாமி, நல வாரிய உறுப்பினர் கணேசன், ரமணி, பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பதிவுபெற்ற அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும், நலத்திட்ட உதவி தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Coimbatore Construction Workers' ,HMS) Association ,Sangh General Secretary ,Manokaran ,Kalimuthu ,HMS ,State Secretary ,Rajamani ,Dinakaran ,
× RELATED கிளுவன்காட்டூர் கிளை வாய்க்காலை தூர் வார கோரிக்கை