×
Saravana Stores

இலவச திருமணம் செய்து கொள்ள கோயில்களில் பதிவு செய்யலாம்

 

ஈரோடு,அக்.7: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் இலவச திருமணத் திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் அந்தந்த கோயில்களில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்கள் மூலமாக 4 கிராம் தங்கம் உள்பட ரூ. 60 ஆயிரம் செலவில் வரும் 21ம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த கோயில்களின் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருக்கோயில் அலுவலகத்தை நேரில் அணுகுமாறு ஈரோடு நகரில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

The post இலவச திருமணம் செய்து கொள்ள கோயில்களில் பதிவு செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Hindu Religious Charities Department ,Tamil Nadu ,Hindu Religious Charities ,Minister ,Legislative Assembly ,
× RELATED கந்த சஷ்டி திருவிழா தமிழக அரசின் இந்து...