×

மத்தியபிரதேசத்தில் தொழிற்சாலையில் ரூ.1,814 கோடி போதைப்பொருள் சிக்கியது

அகமதாபாத்: மத்தியபிரதேச தலைநகர் போபாலின் புறநகரில் உள்ள பக்ரோடா தொழிற்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அங்கு அதிகளவில் போதைப்பொருள்கள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு திட மற்றும் திரவ வடிவில் வைக்கப்பட்டிருந்த 907.9 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.1,814 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post மத்தியபிரதேசத்தில் தொழிற்சாலையில் ரூ.1,814 கோடி போதைப்பொருள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,AHMEDABAD ,Gujarat Anti-Terrorism Squad ,Delhi Narcotics Squad ,Bagroda Industrial Estate ,Bhopal ,Dinakaran ,
× RELATED மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி