×

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை நேற்று முன்தினமும் விலை அதிகரித்து, சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 880க்கு விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வால், நகை வாங்க நினைத்தோர் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். விரைவில் ரூ.57 ஆயிரம் என்ற நிலையை தங்கம் எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!