×

துறைமுகம் பகுதியில் திமுக முப்பெரும் விழா; 800 ஆட்டோ ஓட்டுநருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் திமுக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழா மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பா.ஜெகதீஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோக்கள், 800 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள், சீருடைகள் மற்றும் அறுசுவை உணவுகளை வழங்கினர்.

இதில், பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர், ஜி.எம்.தேவன், எம்.விஜயகுமார், கவுன்சிலர் இசட் ஆசாத், மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு. ராஜேஷ் ஜெயின், என்.பி.எம்.ஷேக் அப்துல்லா, டி.லோகேஷ், எம்.விநாயகம், பி.விஜயகுமார், ஆர்.கலைச்செல்வி, எல்.சம்பத்குமார், பா.பிரதீப்குமார், வட்டச்செயலாளர்கள் ஆ.நா.பார்த்திபன், க.கவியரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

The post துறைமுகம் பகுதியில் திமுக முப்பெரும் விழா; 800 ஆட்டோ ஓட்டுநருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Dimuka Mupperum Ceremony ,Port ,Chennai ,Dimuka Youth ,Eastern District ,of ,Dimuka Coral Festival of the Year ,Port Assembly Constituency ,District Youth Deputy ,Jagdish ,Velu ,B. K. Sekarpapu ,Dimuka Mupram Festival ,
× RELATED மாணவர் அணி சார்பில் திமுக முப்பெரும் விழா