×

மாணவர் அணி சார்பில் திமுக முப்பெரும் விழா


காஞ்சிபுரம்: திமுக மாணவரணி சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழா, முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை 108வது பிறந்தநாள் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா, காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். மாநில மாணவரணி செயலாளரும் காஞ்சி தொகுதி எம்எல்ஏவுமான ஏழிலரசன் வரவேற்பு பேசுகிறார்.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் கல்வித் துறை அமைச்சருமான அன்பின்மகேஷ், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் கலந்து கொண்டு நிலைத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்கள். காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கலந்து கொள்கிறார்கள்.

The post மாணவர் அணி சார்பில் திமுக முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Dimuka Mupperum Ceremony ,Kanchipuram ,Dimuka ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Udayaniti Stalin ,Minister ,C. V. M. Annamalai ,Celebration ,Giant Public Gathering and Welfare Relief Ceremony ,Kancheepuram ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து மாற்றத்தால் வியாபாரம்...