×

காந்தி ஜெயந்தி விழா 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

 

கோவை, அக்.4: கோவை மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா, நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா, தியாகி என்.ஆர் கொண்டசாமி நினைவு தினம் ஆகியவை நஞ்சுண்டாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் என்.கே அசோக்குமார் தலைமை தாங்கி காந்தியடிகள், சிவாஜி கணேசன் மற்றும் தியாகி என்.ஆர் கொண்ட சாமி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவை மாநகராட்சியின் 62வது வார்டு கவுன்சிலர் ரேவதி முரளி 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இவ்விழாவில் கோட்டை அமீர்பாஷா, சி ஆறுமுகம், என்.எஸ் ஞானவேல், கே.தியாகராஜன், எம்.நடராஜன் வி.பாலமுருகேசன் கோபால் ராஜேஷ், காளிமுத்து, மணி, சிவகாமி, அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காந்தி ஜெயந்தி விழா 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED டிச.27ல் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்