×

வேளாண் பல்கலையில் சர்வதேச உணவு இழப்பு விழிப்புணர்வு

 

கோவை, அக். 4: கோவை தமிழ்நாடு வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உணவு பதன்செய் பொறியியல் துறை சார்பில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த ஆண்டு கருப்பொருள் ‘‘உணவு இழப்பு மற்றும் கழிவுகளை குறைப்பதற்கான கால நிலை நிதி’’ ஆகும். இதனை வலியுறுத்தி பல்கலை வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, முதன்மையர் ரவிராஜ், மாணவர் நலன் டீன் மரகதம், பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கிவைத்தனர்.

இதில், உணவுப்பதப்படுத்துதல் துறைத்தலைவர் உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உணவு இழப்பு மற்றும் கழிவுத்தடுப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விழிப்புணர்வு பேரணியில், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 600 பேர் கலந்துகொண்டனர். மேலும், வினாடி வினா, சுவரொட்டி வழங்குதல், மீம் உருவாக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு நடந்தது.

The post வேளாண் பல்கலையில் சர்வதேச உணவு இழப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags :
× RELATED டிச.27ல் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்