×

தாக்குதல் புகாரில் மதுரை துணை மேயர் மீது வழக்கு

மதுரை: மூதாட்டியை தாக்கிய புகாரில் மதுரை மாநகராட்சி துணை மேயர், அவரது சகோதரர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜெய்ஹிந்த்புரம் 2வது தெரு பகுதியை சேர்ந்த வசந்தா என்ற மூதாட்டியை தாக்கியதாக புகார் எழுந்தது. மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குமார், முத்துசாமி, முத்து ஆகியோர் மீதும் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் வழக்கு பதிந்தது.

The post தாக்குதல் புகாரில் மதுரை துணை மேயர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Deputy Mayor ,Municipality ,Jaihindpuram ,JAIHINDPURAM 2ND STREET AREA ,Dinakaran ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டெண்டர் கோரிய மதுரை மாநகராட்சி