×

2023-24ம் ஆண்டிற்கு நடந்த மாநில போட்டியில் தடகள போட்டியில் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

தோகைமலை அக். 1: கரூர் மாவட்ட அளவில் தடகள போட்டியில் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர். தமிழ்நாடு அரசு வழிபாட்டுதல்படி பள்ளிக்கல்வித்துறை சார்பாக 14 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கான தடகள போட்டிகள், கடந்த மாதம் குறு வட்ட அளவில் மாவட்ட முழுவதும் தனித்தனியாக நடந்தன. 2024-2025 கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கான குறுவட்ட போட்டிகளில் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். குறுவட்ட பேட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர்.

இதனை அடுத்து, கரூர் காகிதபுரத்தில் உள்ள டி.என்.பி.எல்., விளையாட்டு மைதானத்தில் நடந்த மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். இதில், 19 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 110 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் சத்யா என்ற மாணவி வெற்றி பெற்று முதல் பாpசு பெற்றார். இதேபோல் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாணவர்கள் பிரிவில் 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் மோனிஷ் என்பவர் 2ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் மற்றும் 2ஆம் இடம்பிடித்து வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதனை அடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சிகள் அளித்த வளையாட்டுத்துறை ஆசிரியரையும், பள்ளியின் தலைமை ஆசிரியர் புளோராராணி உள்பட உதவி தலைமை ஆசிரியர், பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post 2023-24ம் ஆண்டிற்கு நடந்த மாநில போட்டியில் தடகள போட்டியில் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Dharagambatti Government Higher Secondary School ,Tokaimalai ,Karur ,Tamil Nadu Government Department of School Education ,
× RELATED கரூர் வெங்கமேடு அருகே பாம்பு கடித்து பெண் பலி