×

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

விருதுநகர், அக்.1: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீக்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.05 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், விதவை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமரும் இடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில், தையல் இயந்திரம் கோரி மனு அளித்த 3 பெண்களுக்கு உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்களை வழங்கினார். தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் நலவாரியம் மூலம் 54 பேருக்கு ரூ.2.05 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். டிஆர்ஓ ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

The post ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaseelan ,People's Grievance Day ,Virudhunagar Collector ,
× RELATED பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து