×

கான்பூர் சென்ட்ரல்-மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

 

திருப்பூர், அக். 1: பண்டிகை காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதால் கான்பூர் சென்ட்ரல் – மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி கான்பூர் சென்ட்ரல்-மதுரை சிறப்பு ரயில் (எண்:01927) 09.10.2024 முதல் 01.01.2025 வரை புதன்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வந்து சேரும்.

அதுபோல் மதுரை-கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்:01928) 11.10.2024 முதல் 03.01.2025 வரை வெள்ளிக்கிழமை இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை இரவு 10.20 மணிக்கு கான்பூர் சென்ட்ரல் வந்து சேரும். கான்பூர் சென்ட்ரல்-மதுரை சிறப்பு ரயில் திருப்பூருக்கு அதிகாலை 2.33 மணிக்கும், மதுரை – கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் திருப்பூருக்கு அதிகாலை 5.13 மணிக்கும் வந்து சேரும். இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கான்பூர் சென்ட்ரல்-மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Kanpur Central ,Madurai ,Tirupur ,Kanpur Central-Madurai Special Train ,Kanpur Central-Madurai ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு