×

ஆயுதப்படை ஏட்டுக்கள் 20 பேர் 3 ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம்

சேலம், செப்.30: சேலம் மாவட்ட ஆயுதப்படை ஏட்டுகள் 20 பேரை 3 ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து, எஸ்பி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்ட காவல்துறையில் தீவட்டிப்பட்டி, மகுடஞ்சாவடி, தலைவாசல் ஆகிய காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்க கூடுதல் போலீசாரை நியமிக்க எஸ்பி கௌதம்கோயல் முடிவு செய்தார்.

அதன்படி, சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த ஏட்டுக்கள் 20 பேரை, அந்த 3 போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். தீவட்டிப்பட்டி உள்பட 3 போலீஸ் ஸ்டேஷன்களும் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள ஸ்டேஷன்களாக இருப்பதால், வாகன சோதனையை தீவிரப்படுத்தவும், குற்றதடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், கூடுதல் போலீசாரை நியமித்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post ஆயுதப்படை ஏட்டுக்கள் 20 பேர் 3 ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Salem ,SP ,Salem District Armed Forces ,Salem District Police ,Divattipatti ,Makudanjavadi ,Thalaivasal police ,Dinakaran ,
× RELATED எஸ்.பி., அலுவலகத்தில் ஐஜி வருடாந்திர...