×

திருப்பூரில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்

 

திருப்பூர், செப்.30: திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் தாசில்தார் நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தாராபுரம் முன்னாள் தாசில்தார் கோவிந்தசாமி டாஸ்மாக் உதவி மேலாளராகவும், திருப்பூர் டாஸ்மாக் உதவி மேலாளராக இருந்த நந்தகோபால் காங்கயம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், காங்கயம் ஆதிதிராவிடர் தனி தாசில்தார் செல்வி காங்கயம் கலால் மேற்பார்வை அலுவலராகவும்,

காங்கயம் கலால் மேற்பார்வை அலுவலர் கமலேஸ்வரன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராகவும்,திருப்பூர் தெற்கு தாசில்தார் மோகன் காங்கயம் தாசில்தாராகவும்,காங்கயம் தாசில்தார் மயில்சாமி திருப்பூர் தெற்கு தாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தார் சரவணன் திருப்பூர் கலெக்டர் அலுவலக குற்றவியல் அலுவலக மேலாளராகவும்,திருப்பூர் கலெக்டர் அலுவலக குற்றவியல் அலுவலக மேலாளர் ராஜேஷ் ஊத்துக்குளி சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை தாசில்தாராக இருந்த முருகேஸ்வரன் ஊத்துக்குளி தாசில்தாராகவும், திருப்பூர் கலால் அலுவலக மேலாளராக இருந்த அருணா உடுமலை ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராகவும், உடுமலை ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராக இருந்த சைலஜா உடுமலை குடிமைப் பொருள் தனி தாசில்தாராகவும், உடுமலை குடிமை பொருள் தனித்தாசில்தாராக இருந்த கார்த்திகேயன் தாராபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

The post திருப்பூரில் தாசில்தார்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tahsildars ,Tirupur ,Tirupur District Revenue Department ,Tarapuram ,Tahsildar Govindasamy ,Tasmac ,Manager ,Nandagopal Kangayam ,Adi Dravidar Nala Tahsil ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!