×
Saravana Stores

திருவாரூரில் 4 பேருக்கு குண்டாஸ்

திருவாரூர், செப். 29: திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்த 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலீப், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீடாமங்கலம் அக்ரஹாரபூவனூரை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் தயாநிதிமாறன் (19) மற்றும் பூவனூர் பண்டாரவடை பகுதியை சேர்ந்த கார்த்தி அந்தோணி மகன் ஷியாம் (19) ஆகியோர் மீது களப்பால் போலீஸ் ஸ்டேசனில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் கடந்த மாதம் 16ந் தேதி அரிவாள்களோடு பொது மக்களை மிரட்டியதாக போலீசார் மூலம் இருவரும் கைது செய்யப்பட்டு நாகை கிளை சிறையில் ஷியாம் அடைக்கப்படார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்த திருத்துறைப்பூண்டி வங்கநகர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் (60) என்பவர் கடந்த மாதம் 17ந் தேதி நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து 4 பேரும் போலீசார் நாகை கிளை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்தனர். இதே போல் திருவாரூர் நகர் அழகிரிகாலணி பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் மகன் அலெக்ஸ் (24). பிரபலரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் 25ந் தேதி கொலை முயற்சி வழக்கு ஒன்றில் திருவாரூர் டவுன் போலீசாரால் மேற்படி அலெக்ஸ் கைது செய்யப்பட்டு நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு வந்ததால் அலெக்ஸை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் சாரு நேற்று அலெக்ஸை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் மூலம் நாகை சிறையிலிருந்து அலெக்ஸ் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார். மேலும் இதேபோன்று மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூரில் 4 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiruvarur district ,SB ,Jayakumar ,
× RELATED திருவாரூர் மாவட்டம் பேரளம் ரயில்வே மேம்பால அணுகு சாலை பணி மும்முரம்