×

ஆவணம் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்ய கோரிக்கை

தொண்டி, செப்.29: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எவ்வித அனுமதியும் இல்லாமல், டூவீலர் அதிகம் காணப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி பகுதியில் அதிகமான டூவீலர்கள் கோயமுத்தூர், திருப்பூர் பகுதியிலிருந்து வந்துள்ளது. பெரும்பாலான வாகனங்களுக்கு உரிமம், இன்சூரன்ஸ் என எதுவும் இல்லாமல் உள்ளது. விபத்தில் வாகனங்கள் சிக்கும் போது பெரும் சேதம் ஏற்படுகிறது. அதனால் இதுபோன்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கலந்தர் ஆசிக் கூறியது, எவ்வித ஆவணமும் இல்லாமல் அதிகமான டூவீலர் தொண்டி பகுதியில் உள்ளது. விபத்து ஏற்படும் போது இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இல்லாததால் கடும் சிரமம் ஏற்படுகிறது. அதனால் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post ஆவணம் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tondi ,Tonga ,Thondi ,Coimuttur ,Tiruppur ,Dinakaran ,
× RELATED அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்த 4 படகுகளின் மின் விளக்குகள் பறிமுதல்