தக்கலை, செப். 27: அரிய வகை காடை கோழி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பத்மநாபபுரம் நகராட்சியில் 13 வார்டு கவுன்சிலராக இருப்பவர் சபீனா. இவரது கணவர் கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த காடை கோழியில் 3 காடைகள் வெள்ளை நிறத்தில் இருந்தது. இது அரிய வகையை சேர்ந்ததாகும். ஏற்கனவே இது போன்ற காடைக்கோழிகள் உதயகிரி பல்லுயிரின பூங்காவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த சபீனா 3 காடை கோழிகளையும் வனத்துறையிடம் ஒப்படைக்க தீர்மானித்தார். இதையடுத்து அந்த அரிய வகை காடை கோழிகளை உதயகிரி பல்லுயிரின பூங்காவில் உள்ள வன ஊழியரிடம் அவர் ஒப்படைத்தார்.
The post அரிய வகை காடை வனத்துறையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.