×

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையினை மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா, அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் வழங்கினர். திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக சார்பில் ஆர்.கே.பேட்டை வங்கனூர், எஸ்விஜி புரம், ராஜா நகரம், அம்மையார்குப்பம், வீராணத்தூர், வெள்ளத்தூர், ஆதிவராகபுரம், அய்யனேரி, அம்மனேரி, கொண்டாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றியச் செயலாளர் நாகப்பூண்டி குமார் தலைமை தாங்கினார்.

இதில், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, அமைப்பு செயலாளரும், அரக்கோணம் முன்னாள் எம்பியுமான திருத்தணி கோ.அரி ஆகியோர் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். இந்நிகழ்வில் முன்னாள் ஆவின் சேர்மேன் வேலஞ்சேரி கவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பொன்ரங்கம், மாவட்ட கவுன்சிலர் பாண்டுரங்கன், ஒன்றிய நிர்வாகிகள் கொல்லாபுரி, சுரேஷ், பார்த்திபன், ரோசி ரெட்டி, கோவிந்த ரெட்டி, வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,RK Pettah Union ,RK Pettah ,District ,PV Ramana ,Tiruthani Ko Ari ,Thiruvallur West District ,RK Pettah Vanganur ,SVG Puram ,Raja ,ADMK ,Dinakaran ,
× RELATED ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் ரூ.88 லட்சம்...