×

37 மீனவர்களை விடுவிக்க வேண்டும்; இலங்கை ஜனாதிபதிக்கு மயிலாடுதுறை எம்பி மனு

மயிலாடுதுறை: இலங்கை ஜனாதிபதிக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், இலங்கை ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள். மயிலாடுதுறை தொகுதி நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது.மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார், சந்திராபாடி, வானகிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் பகுதியை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 21ம் தேதி இலங்கை மீன்பிடி படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் இறந்தது பற்றி மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.

மேலும் 2 பேரின் உடல்களை மீட்க உதவியுள்ளனர். ஆனால் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உங்கள் நாட்டை சேர்ந்த 2 மீனவர்கள் உடலை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டது தவறா? எனவே 37 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் இலங்கை சிறைகளில் வாடும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

The post 37 மீனவர்களை விடுவிக்க வேண்டும்; இலங்கை ஜனாதிபதிக்கு மயிலாடுதுறை எம்பி மனு appeared first on Dinakaran.

Tags : MAYILADU ,PRESIDENT OF ,SRI LANKA ,Mailadudhara ,Sudha ,President of Sri Lanka ,President ,Mayiladudura ,Bombukar ,Chandrapadi ,Vanagiri ,Sinnamedu ,Madathukupam ,Mayiladudra ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை,...