×

உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி 44 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு

*3.5 கோடி பேர் குழந்தைகள்

*மாவட்ட கலெக்டர் தகவல்

திருச்சி : சா்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துக்கள் தொிவித்தார்.திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சா்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு 35 செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்து தொிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது,மொழி மனித நாகாிகத்தின் முதல் அடையாளமாகும். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை மொழிதான் மனிதனை ஆளுகிறது. ஆனால் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் தனி மொழியை பேச முடியாமலும், கேட்க முடியாமலும் அவதிக்குள்ளாவதை நிவா்த்தி செய்யும் வகையில் அவா்களின் முதல் மற்றும் கடைசி மொழியாக சைகை மொழியே உள்ளது.

உலக சைகை மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் தொிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சைகை மொழியை அனைவாிடமும் கொண்டு சோ்ப்பதே உலக சைகை மொழி தினத்தின் நோக்கமாகும். உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 44 கோடி போ் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதில் 3.5 கோடி போ் குழந்தைகள். 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் சைகை மொழி பற்றிய விழப்புணா்வு போதிய அளவில் இல்லை. நாட்டில் 6.5 கோடி போ் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாக உள்ளனா்.

எனவே, குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள் காது கேளாத குறைபாட்டை கண்டறிந்தால், தற்போதைய நவீன மருத்துவ வசதிகளை கொண்டு அவா்களுக்கு சிகிச்சை அளித்து 60% குழந்தைகளை இக்குறைபாட்டில் இருந்து குணமாக்கலாம். சமூகத்தில் இவா்கள் சந்திக்கும் பிரச்னைகள் பல விதமாகவுள்ளது.கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் உணவகங்கள் என சாதாரன மனிதா்கள் பயணிக்கும் இடங்களில் இவர்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனா்.

இதுபோன்ற அடிப்படை தேவைகளுள்ள இடங்களில் இவர்களுக்கான வசதிகளை ஏறப்படுத்தி தருவது அவசியமாகும். செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு நாம் அனைவரும் அடிப்படையான சைகை மொழியை தொிந்து கொண்டு அவா்களுக்கு உதவ வேண்டும் என்றார்.இந்திய சைகை மொழி வாரத்தை முன்னிட்டு செப்.23 முதல் செப்.29 தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 10 பேருக்கு நவீன காதொலிக் கருவிகளும், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் தக்க செயலியுடன் கூடிய திறன் பேசி 5 நபா்களுக்கும் என மொத்தம் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், முடநீக்கியல் வல்லுநா் ராமன், மாவட்ட உதவி செயல்படுத்தும் அலுவலா் ரமேஷ், திருச்சி மாவட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட நல முன்னேற்ற சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், சிறப்புப் பள்ளி ஆசிரியா்கள், அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

The post உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி 44 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு appeared first on Dinakaran.

Tags : World Health Organization ,Collector ,Pradeep Kumar ,International Day of the Deaf ,Indian Sign Language Day ,Dinakaran ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் பாதுகாப்பு தின உறுதி மொழி ஏற்பு