×

அதிமுக நிர்வாகி வீடு, அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி (38). இவரது வீடு உத்தமபாளையத்திற்கு செல்லும் சாலையில், பழைய பாளையம் அருகே உள்ளது. வீட்டிலேயே கட்சி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 பேர், பிச்சைக்கனி வீடு, அலுவலகம் முன்பாக பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பினர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அவர் சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தேனி எஸ்பி சிவபிரசாத், சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு செய்தார். போலீசார், சின்னமனூரைச் சேர்ந்த 2 பேரை பிடித்து உள்கட்சி பூசல் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அதிமுக நிர்வாகி வீடு, அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chinnamanur ,Pichaikani ,Theni ,Uttamapalayam ,Old Palayam ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கு ஆயுதங்களுடன் வந்த மாணவருக்கு ‘டிசி’: 3 மாணவர்கள் சஸ்பெண்ட்