×

பொதட்டூர்பேட்டை பகுதியில் அனுமதியின்றி இயங்கிய நீர் உறிஞ்சும் அறைக்கு சீல்

பள்ளிப்பட்டு: அனுமதியின்றி நிலத்தடி நீரை டிராக்டர் டேங்க்கில் விற்பனை செய்த நீர் உறிஞ்சசும் அறைக்கு பள்ளிப்பட்டு தாசில்தார் சீல் வைத்தார். பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் சிலர் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சி மினரல் வாட்டர் என்று பாட்டில்களில் அடைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக கலெக்டருக்கு புகார் சென்றது. இதில் கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சிவக்குமார், துணை வட்டாட்சியர் சேகர், பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் ராமு ஆகியோர் நேற்று மாலை பாண்டறவேடு கிராமத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் மாணிக்கம் என்பவர் அவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் அனுமதிபெற்று நிலத்தடி நீரை அதிகளவில் மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்துள்ளார். அதனை லாரி மற்றும் டிராக்டர் டேங்குகளில் ஓட்டல்கள், தனியார் திருமண மண்டபங்களுக்கு அவர் விற்பனை செய்து வருவது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவரது நீர் உறிஞ்சும் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அனுமதியின்றி நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக திருத்தணி கோட்டாட்சியர் தீபா விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என்று வட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்தார்.

The post பொதட்டூர்பேட்டை பகுதியில் அனுமதியின்றி இயங்கிய நீர் உறிஞ்சும் அறைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Bodaturpet ,Pallipatu ,
× RELATED குளிர்பானத்தில் கழிவு பொருட்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி