×

திரிபுராவில் 500 தீவிரவாதிகள் சரணடைய முடிவு

அகர்தலா: டெல்லியில் கடந்த 4ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிபுரா முதல்வர் மாணிக் சாகா முன்னிலையில் நேஷனல் லிபரேசன் முன்னணி மற்றும் அனைத்து திரிபுரா டைகர் போர்ஸ் ஆகியவற்றின் தலைவர்கள் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதனை தொடர்ந்து இரு அமைப்புக்களை சேர்ந்த சுமார் 500 பேர் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து முதல்வர் மாணிக் சாகா முன்னிலையில் சரண் அடைய உள்ளனர். இரு அமைப்புக்களும் கடந்த 1990ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து இரண்டு தசாப்தங்களாக மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வந்தன. கிளர்ச்சியின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பழங்குடியினர் அல்லாதவர்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

The post திரிபுராவில் 500 தீவிரவாதிகள் சரணடைய முடிவு appeared first on Dinakaran.

Tags : Tripura Agartala ,National Liberation Front ,Tripura Tiger Forces ,Union ,Home Minister ,Amit Shah ,Tripura ,Chief Minister ,Manik Saga ,Delhi ,
× RELATED பழச்சாறில் சிறுநீர் கலந்ததாக சர்ச்சை...