×

மதுரை மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து : கட்டிடம் சீரமைக்கப்படுமா? புதிதாக அமைக்கப்படுமா? என அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!!

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று புற நோயாளிகள் பிரிவு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கணினி மற்றும் கருவிகள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக புறநோயாளிகள் காயம் அடைவது தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சேதம் அடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்களில் வெளியாகின.

இதன் அடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டிட மேற்கூரை இடிந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மருத்துவமனை மேற்கூரை இடிந்து விவகாரத்தில் என்ன நடந்தது? அதன் பரப்பளவு என்ன? கட்டடம் கட்டப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது?. மீட்பு நடவடிக்கை என்ன?. கட்டிடம் சீரமைக்கப்படுமா? அல்லது இடித்து புதிதாக அமைக்கப்படுமா?. வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தனர்.

The post மதுரை மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து : கட்டிடம் சீரமைக்கப்படுமா? புதிதாக அமைக்கப்படுமா? என அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Hospital ,Madurai Government Rajaji Hospital ,Madurai Hospital ,Dinakaran ,
× RELATED மருத்துவமனை கூரை இடிந்த விவகாரம்: ஐகோர்ட் கிளை சூமோட்டோ வழக்கு