×

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி

நெல்லை: நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் ராஜபதி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (41). இவருக்கு செல்வி (36) என்ற மனைவி உள்ளார். இவரது மகள்கள் மாரீஸ்வரி (12), சமீதா (7). இந்நிலையில் நேற்று காலையில் சுமார் 10.30 மணியளவில் கண்ணன், தனது மாமியார் ஆண்டாள் (67) மற்றும் மகள்களுடன் பைக்கில் நெல்லை வண்ணார்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

உலகம்மன் கோயில் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் பைக் வந்த போது எதிரே வந்த டேங்கர் லாரி, பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கணேசன் (33) என்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kannan ,Rajapathi South Street, Gangaikondan, Nellai district ,Mariswari ,Sameetha ,
× RELATED நெல்லை எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்