×

பிரதமர் மோடி பிறந்தநாள் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தொடர்ந்து பொது சேவையுடன் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

* முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உங்களின் அயராத அர்ப்பணிப்பும், துணிச்சலான பார்வையும், மாற்றும் தலைமையும் இந்தியாவின் பாதையை மறுவரையறை செய்து, நாடு முழுவதும் எண்ணற்ற உயிர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்கள் தைரியம், வலிமை, ஞானம், நன்மையுடன் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

* பாமக நிறுவனர் ராமதாஸ்: பிரதமர் மோடி அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்; இந்தியத் திருநாட்டை வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

* அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடனும், நீண்ட காலக் கண்ணோட்டத்துடனும், இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து, உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. சிறந்த ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுடன் நமது தேசத்திற்கு ஞானத்துடனும் இரக்கத்துடனும் தொடர்ந்து சேவை செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

* பாமக தலைவர் அன்புமணி: 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி, இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

* ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்: வாழ்நாள் முழுமைக்கும் தேசப் பணிகளுக்கென்று தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் பிரதமர், ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், பன்னெடுங்கால பழமையும் பெருமையும் கொண்ட பாரத தேசத்தின் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றும், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திக் காட்டியுள்ளார். அவருக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

* தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நிலைத்த உடல்நலத்துடன் திகழ்ந்திட விழைகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடி பிறந்தநாள் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi ,CHENNAI ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு ஏ.சி.சண்முகம் பிறந்தநாள் வாழ்த்து..!!