×

கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் அருகே 300க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இங்கு பொருட்கள் வாங்க வருகின்றவர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே விட்டுவிட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வெளி மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட் அருகே செல்வதால், இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் நேற்று போலீசார் அங்கு வந்து போக்குவரத்துக்கு இடையூறாக போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

The post கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Coimbed Market ,Ananagar ,Coimbed ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் கழுவி...