×

விழுப்புரம் அருகே இன்று காலை மாதா ஆலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் திடீர் பதற்றம்: போலீசார் குவிப்பு

விழுப்புரம்: கோர்ட் உத்தரவின்பேரில் மாதா ஆலயத்தை இடிக்க வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பதற்றம் நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் சித்தூர்-கடலூர் சாலை ஓரமாக கொட்டகை அமைத்து அதில் மாடுகளை கட்டி வந்துள்ளார். அந்த இடத்தில் மாதா கோயில் கட்டுவதற்காக இடத்தை காலி செய்து கொடுக்கும்படி கேட்டதன் பேரில், அவர் கொட்டகையை காலி செய்து கொடுத்தார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கோயில் கட்டியிருப்பதாக அந்த நபர் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு வழங்கியது.

இதன்பேரில் கடந்த மாதம் திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் தலைமையில் வருவாய்துறையினர் போலீசார் உதவியுடன் ஆலயத்தை இடிப்பதற்கு சென்றபோது பொதுமக்கள் ஒரு மாதம் காலக்கெடு கேட்டிருந்தனர். காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் 3 வாரங்கள் (21 நாள்) மட்டுமே காலக்கெடு கொடுத்திருந்தனர். நேற்றுடன் 21 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட மாதா ஆலயத்தை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதா ஆலயத்தை மாடி, பால்கனியிலும் ஏறி நின்று எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அசம்பாவிதம் நடக்காத வகையில் பாதுகாப்பு கருதி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

 

The post விழுப்புரம் அருகே இன்று காலை மாதா ஆலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் திடீர் பதற்றம்: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mata temple ,Villupuram ,Parukampatu ,Thiruvenneynallur ,Chittoor-Kadalur road ,
× RELATED தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது