×

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி: மோர்னே மோர்கல் பேட்டி

சென்னை:இந்தியா-வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் வரும் 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்ஆப்ரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் பொறுப்பேற்றுள்ளார். அவரது மேற்பார்வையில் பவுலர்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.

இதனிடையே இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வாய்ப்பு பற்றி மோர்னே மோர்கல் கூறியதாவது: “எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்த தகவல் தெரிந்ததும் அறையில் அப்படியே 5 நிமிடங்கள் சும்மா உட்கார்ந்திருந்தேன். நான் என் மனைவியிடம் கூட சென்று இதை தெரிவிக்கவில்லை. நான் நேராக என் தந்தைக்குதான் சொன்னேன்.

ஏனென்றால் பல வருடங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்து வந்ததால் இது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நினைத்தேன். இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம். இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் பற்றி நான் எனக்குள் பகிர்ந்து கொண்டேன். இறுதியில் இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தற்பொழுது நான் இறுதியாக இங்கு வந்துவிட்டேன். இந்திய அணியில் இருக்கும் சில வீரர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். மேலும் சில வீரர்களை ஐபிஎல் தொடரில் பார்த்திருக்கிறேன். இந்த ஒரு முகாமில் இருந்து நல்ல தொடர்பையும் நல்ல நட்பையும் உருவாக்குவது மிகவும் முக்கியம்” என்றார்.

The post இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி: மோர்னே மோர்கல் பேட்டி appeared first on Dinakaran.

Tags : cricket ,Morne Morkel ,Chennai ,India ,Bangladesh ,Chepakkam Stadium ,Dinakaran ,
× RELATED ஹாங்காங் சிக்ஸர் லீக் போட்டிகளில்...