×

ஈரோடு அருகே பட்டா கேட்டு சலவை, சவரத் தொழிலாளர்கள் போராட்டம்..!!

ஈரோடு: அந்தியூரில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சவரம், சலவைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளையம்பாளையம் மேட்டில் 3 ஏக்கரில் சலவை, சவரத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்பட்டும் வீட்டுமனை பட்டா பிரித்துக் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆட்சியருக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தியூர் வட்டாட்சியர் பேச்சு நடத்தியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

The post ஈரோடு அருகே பட்டா கேட்டு சலவை, சவரத் தொழிலாளர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Anthiyur ,Villiyampalayam hill ,Dinakaran ,
× RELATED அந்தியூர் அருகே எலிக்காய்ச்சலுக்கு...