×

வளரிளம் பெண்களின் ரத்த சோகையை குறைக்கும் சித்தா மருந்துகளின் கலவை: அறிவியல் பூர்வமாக நிரூபணம்

புதுடெல்லி: சித்தா மருந்துகளின் கலவை வளரிளம் பெண்களின் ரத்த சோகையை குறைப்பதாக ஆய்வில் நிரூபணமாகி உள்ளது. ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பிரபல இந்தியன் ஜர்னல் ஆப் டிரடிஜனல் நாலேஜ் இதழில், சித்தா மருந்துகளின் கலவை வளரிளம் பெண்களின் ரத்த சோகையை குறைப்பதாக ஆய்வுக் கட்டுரை வெளியிாகி உள்ளது.

இந்த ஆய்வில், தேசிய சித்தா இன்ஸ்டிடியூட், தமிழ்நாட்டின் சேவியர் ஆராய்ச்சி அறக்கட்டளை, தமிழ்நாட்டின் வேலுமயிலு சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இவர்கள், அன்னபேதி செந்தூரம், பாவன கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்I ஏபிஎன்எம் என்கிற கலவை சித்தா மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து 2,648 சிறுமிகளுக்கு தரப்பட்டது.

இதில் 2,300 மாணவிகள் 45 நாள் தொடர்ச்சியாக மருந்தை உட்கொண்டுள்ளனர். அவர்களில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 283 சிறுமிகளிடம் நடத்திய சோதனையில், அவர்களின் ஹீமோகுளோபின் அளவு, பிசிவி, எம்சிவி, எம்சிஎச் அளவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளன. மேலும், சோர்வு, முடி உதிர்தல், தலைவலி, ஆர்வம் குறைதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற ரத்த சோதனையின் பாதிப்புகளையும் இந்த சித்தா மருந்து கலவை குறைத்துள்ளது நிரூபணமாகி உள்ளது.

The post வளரிளம் பெண்களின் ரத்த சோகையை குறைக்கும் சித்தா மருந்துகளின் கலவை: அறிவியல் பூர்வமாக நிரூபணம் appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Union Ministry of Ayush ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...