×

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Board of Trade Associations of ,Tamil ,Nadu ,Chief Executive Officer ,K. Stalin ,Chennai ,Valaiyan Daraiwa K. Stalin ,Council of Tamil Nadu Merchants Associations ,Baliyan Bharaiveitiya ,Chief Minister ,Dinakaran ,
× RELATED அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு...