×

வாரிசு சான்றுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பசியாபுரத்தை சேர்ந்தவர் வசந்த் (35). இவரது தந்தை கண்ணதாசன் சமீபத்தில் இறந்து விட்டார். வாரிசு சான்றிதழ் கோரி வருவாய்த்துறையிடம் வசந்த் விண்ணப்பம் செய்திருந்தார். இதற்கு கொந்தகை வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ) முத்து முருகன் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதில் ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில், மேலும் ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதுகுறித்து வசந்த், சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆர்ஐ முத்து முருகனிடம் அலுவலகத்தில் வசந்த் நேற்று கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆர்ஐ முத்துமுருகனை கைது செய்தனர்.

The post வாரிசு சான்றுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது appeared first on Dinakaran.

Tags : Thiruppuwanam ,Vasant ,Lower Pashiapuram ,Thirupuwanam, Sivaganga District ,Kannadasan ,Ministry of Revenue ,TURNOVER REVENUE ANALYST ,R. i) Muthu Murugan ,
× RELATED மாஜி எம்பி, மாஜி எம்எல்ஏ உட்பட...