×

மீனவர்கள் மீது ஒரே நாளில் 2 இடங்களில் தாக்குதல்: ஒரே மாதத்தில் 4-வது முறையாக கடற்கொள்ளையால் அதிர்ச்சி

நாகப்பட்டினம்: நாகை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி வலைகளை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 பேர் சென்றனர். அப்போது வேதாரண்யம் மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

ஆறுக்காட்டுதுறையில் இருந்து சென்ற 5 மீனவர்கள் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 400 கிலோ வலைகளை அறுத்துக்கொண்டு கொள்ளையடித்து சென்றனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான வலைகளை பறிகொடுத்து வெறும் கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர். ஒரே நாளில் வேதாரண்யத்தை தொடர்ந்து கோடியக்கரை மீனவர்கள் மீதும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரை தென்கிழக்கே 14 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாகை மீனவர்கள் சந்திரன், சண்முகம், ஆறுமுகம், மதுரை வீரன் ஆகியோர் மீது 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகளை அறுத்து பறித்துச் சென்றதாக மீனவர்கள் நாகை மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வாக்கி டாக்கி, செல்போன், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட பொருட்களையும் கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இந்த மாதம் மட்டும் 4 முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆற்காட்டுத்துறை மீனவர்களின் வலைகளை வெட்டி, மீனவர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

The post மீனவர்கள் மீது ஒரே நாளில் 2 இடங்களில் தாக்குதல்: ஒரே மாதத்தில் 4-வது முறையாக கடற்கொள்ளையால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Tamil Nadu ,Nagai ,Sivakumar ,Arukattudhura ,Vedaranyam ,
× RELATED சாலைகளில் சுற்றி திரியும் மனநலம்...