டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். 1947 இல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததை நினைவுகூர்ந்து சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர தினம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் ஒரு சிறப்பு நாள், ஆனால் இந்த உலகத்தில் வேறு சில நாடுகளும் இந்த நாளில் தங்கள் சுதந்திரத்தை நினைவுகூருவது சுவாரஸ்யமானது.
ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவைப் போலவே வேறு 5 நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 6 நாடுகளும் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு நாடுகளில் இருந்து போராடி தனியாக பிரிந்து சுதந்திரம் பெற்றது. அந்த 5 நாடுகள் எவை என்று இப்போது பார்க்கலாம்.
பஹ்ரைன்: பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய மேற்கு ஆசியத் தீவு நாடான பஹ்ரைன் பிரிட்டிஷின் காலனியாக இருந்து வந்தது. 15 ஆகஸ்ட் 1971 அன்று, பஹ்ரைன் மக்கள் தொகையில் ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பைத் தொடர்ந்து நாடு பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அணிவகுப்புகள், வானவேடிக்கை காட்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இந்த நாளை கொண்டாடவும், நாட்டின் வரலாறு மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும் நடத்தப்படுகின்றன.
வட கொரியா மற்றும் தென் கொரியா: ஆகஸ்ட் 15, 1945 அன்று இரண்டாம் உலகப் போரின்போது கொரிய தீபகற்பத்தில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு கட்டுப்பாட்டை அமெரிக்க மற்றும் சோவியத் படைகள் முடிவுக்குக் கொண்டுவந்தது. சுதந்திர கொரிய அரசாங்கங்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 15 ஆகஸ்ட் 1948ல் உருவாக்கப்பட்டன. சுதந்திர தினம் தென் கொரியாவில் ஒளி திரும்பிய நாள் என்றும், வட கொரியாவில் விடுதலை என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
காங்கோ ஜனநாயக குடியரசு: பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து சரியாக 80 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிரிக்கா தேசமான காங்கோ 1960ல் பிரான்சிடம் இருந்து முழுமையான சுதந்திரம் பெற்றது. இது பொதுவாக காங்கோ தேசிய தினம் என்று அழைக்கப்படுகிறது.
லிச்சென்ஸ்டைன்: ஆகஸ்ட் 15 அன்று, மத்திய ஐரோப்பாவில் உள்ள இந்த சிறிய, நிலத்தால் சூழப்பட்ட லிச்சென்ஸ்டைன் நாடு அதன் தேசிய தினத்தை கொண்டாடுகிறது. 1866ம் ஆண்டில், உலகின் ஆறாவது சிறிய நாடான லிச்சென்ஸ்டீன், ஜெர்மன் அதிகாரத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.
The post இந்தியாவை போலவே ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் கொண்டாடும் வேறு 5 நாடுகள்..!! appeared first on Dinakaran.